dog 6 - 2026

குடிக்க கொடுத்தா.. குளியலையே முடிச்ச கில்லாடி!

சற்றுமுன் அடடே... அப்படியா? பொது தகவல்கள்
dog 6 - 2026

தண்ணீரை குடிக்க சென்ற நாய் ஒன்று திடீரென்று குளியல் போட தொடங்குகிறது, இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வைரல் வீடியோவானது பைடேங்பைடன் என்கிற ட்விட்டர் கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவில், தரையில் சிறிய வாளியில் நீர் நிரப்பி வைக்கப்பட்டு இருக்கிறது,

கோடை வெயிலின் தாக்கத்தால் வறட்சியான நாய் ஒன்று அதிலுள்ள நீரை அருந்துவதற்காக வாளியின் அருகில் செல்கிறது. பின்னர் அந்த வாளியின் மீது ஏறி நின்று அதிலுள்ள நீரை குடிக்க ஆரம்பிக்கிறது,

பின்னர் வெயிலின் சூடு தாங்காமல் அந்த நீருக்குள் இறங்கி குளிக்க ஆரம்பிக்கிறது. அதனைத்தொடர்ந்து ஓரளவு அந்த நாய்க்கு குளிர்ச்சி கிடைத்ததும் அந்த வாளியிலிருந்து மெதுவாக கீழே இறங்கி நடந்து செல்கிறது.

இந்த வீடியோ இணையத்தில் பலரையும் கவரும்படியாக அமைந்துள்ளது. வெயில் நாயை எவ்வளவு வாட்டி வதைத்து இருக்கிறது என்பது இந்த வீடியோவின் மூலம் தெரிகிறது. இந்த வீடியோவிற்கு இருபத்தி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் குவிந்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.