கேரளாவில் சில நாட்களில் தென்மேற்கு பருவமழை ..

Published:

கேரளாவில் 2 அல்லது 3 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்தது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு தென்படுவதாக தெரிவிக்கப்பட்டது. கடந்தாண்டு ஜூன் 3-ல் துவங்கிய நிலையில் இந்தாண்டு ஓரிரு நாட்கள் முன்னதாகவே பருவமழை துவங்குகிறது.ஏற்கனவே கடந்த பத்து நாட்களாக கேரளாவில் கோடை காலத்தில் மழை அதிகமாக பெய்து குற்றாலத்தில் அருவிகளில் தண்ணீர் வரத்து ஏற்பட்டது.பாபநாசம் குமரி மாவட்டத்தில் அருவி அணைகளில் தண்ணீர் அதிகமாக வந்தது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்தது. சென்னையில் அதிகபட்சமாக 40 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் இருக்கக்கூடும்.29,23ம் தேதிகளில் லட்சத்தீவு, கேரளா, தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

kerala rain - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img