IPL 2022: சாம்பியன் ஆன குஜராத் அணி

ipl 2022 - 2026

K.V. பாலசுப்பிரமணியன்

ஐ.பி.எல் – மே 29, 2022 – இறுதிப்போட்டி
ஹர்திக் பாண்ட்யா பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மூன்றிலும் அசத்தினார்
குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி

குஜராத் டைட்டன்ஸ் அணி (133/3, கில் 45*, ஹர்திக் 34, டேவிட் மில்லர் 32*, போல்ட் 1-14) ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை (130/9, பட்லர் 39, ஹர்திக் 3-17, சாய் கிஷோர் 2-20) 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 100000 க்கும் மேற்பட்ட சொந்த மக்கள் முன்னிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணியை ஐபிஎல் வெற்றிக்கு அழைத்துச் செல்ல கேப்டன் ஹர்திக் பாண்டியா, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துறைகளிலும் இன்று ஜொலித்தார்.

வெள்ளிக்கிழமை இரண்டாவது தகுதிச் சுற்றுக்கு பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளத்தில் டாஸ் இழந்த பிறகு, ஹர்திக் 4-0-17-3 என்ற ஸ்பெல்லில் ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் மற்றும் ஷிம்ரோன் ஹெட்மயர் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் ராயல்ஸின் வலிமையான பேட்டிங் வரிசையை விரைவில் பெவிலியனுக்கு அனுப்பினார்.

ALSO READ:  சபரிமலையில் விஷூ கொண்டாட்டம்..

இதனால் அஷ்வின், ரியான் பராக், ட்ரெண்ட் போல்ட், ஓபேட் மெக்காய், பிரசித் கிருஷ்ணா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோரால் முன்னணி மட்டையாளர்கள் ஆட்டமிழந்த பின்னர் ரன்ரேட்டை உயர்த்த முடியவில்லை.

ராயல்ஸ் 130 ரன்களோடு பந்துவீசத் தொடங்கியபோது, விருத்திமான் சாஹா மற்றும் மேத்யூ வேட் ஆகியோரை வெளியேற்றினர், ஆனால் ஹர்திக், 30 பந்துகளில் 34 ரன்களுடன் அவர்களைச் சமாளித்து ஆடினார்.

டைட்டன்ஸ் 45 ரன்கள் எடுத்த நிலையில், 14-வது ஓவரில் ஹர்திக்கை சாஹல் வீழ்த்தினார், ஆனால் ஹர்திக் ஆரம்பித்த வேலையை ஷுப்மான் கில் மற்றும் டேவிட் மில்லர் அமைதியாக முடித்தனர்.

எல்லாப் போட்டிகளிலும் ஆடிய ஜாஸ் பட்லர், அதாவது 17 போட்டிகளில் ஆடிய பட்லர் 863 ரன்கள் அடித்துள்ளார்; 83 ஃபோர், 45 சிக்சர்கள். இந்த மூன்று துறைகளிலும் அவரே சிறந்த மட்டையாளர். யசுவேந்திர சாஹல் 27 விக்கட்டுகள் எடுத்ததன் மூலம் சிறந்த பந்துவீச்சாளர்.


டேவிட் மில்லருக்கு சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருது, அதிக ஃபோர் அடித்தவர் விருது,
ஹர்திக் பாண்ட்யாவுக்கு கேம் சேஞ்சர் விருது, மிக முக்கியமான வீரர் விருது, ஆட்ட நாயகன் விருது
பவர் ப்ளேயர் விருது போல்ட்
ஃபெர்கூசனுக்கு வேகமான பந்துவீச்சளர் விருது
வளரும் நல்ல ஆட்டக்காரர் விருது – உம்ரான் மாலிக்
ஜாஸ் பட்லர் – அதிக சிக்சர்கள் அடித்தவர் விருது, ‘கிரேட்’ பவர் ப்ளேயர் விருது, அதிக ஃபோர்கள் அடித்தவர் விருது, ஆரஞ்சு தொப்பி விருது, அதிக மதிப்புள்ள வீரர் விருது
தினேஷ் கார்த்திக் – பஞ்ச் ஸ்ட்ரைக்கர் விருது
சஹால் சிறந்த பந்துவீச்சாளர் விருது
சிறந்த கேட்ச் – எவின் லீவிஸ்

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories