ration - 2026

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க.. கண் கருவிழி பதிவு முறை!

சற்றுமுன் அடடே... அப்படியா? தமிழகம்
ration - 2026

தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு கைரேகைக்கு பதில் கண் கருவிழி பதிவு முறை கொண்டு வரப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு கண் கருவிழி கருவி மக்களுக்கு பயன்தரும் வகையில் இருந்தால் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “வயல் வெளியில் வேலை பார்ப்பதால் சிலரது கைரேகைகள் பதிவாகுவதில்லை. இதனால், அவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவது கடினமானதாக உள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 100 சதவீதம் கண் கருவிழி மூலமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்திலும் கண் கருவிழி மூலம் ரேஷன் பொருட்கள் வாங்கும் முறையை அறிமுகம் செய்ய உள்ளோம். மக்களுக்கு அது பயன்தரும் வகையில் இருந்தால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கண் கருவிழி மூலம் பொருட்கள் வாங்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.