பாம்பு மாலை மாற்றி பக்காவா திருமணம்..‌!

Published:

snake 9 - 2026

பாம்பு மாலை மாற்றி திருமணம் செய்து பகீர் கிளப்பியுள்ளனது மகாராஷ்டிராவைச் சேர்ந்த திருமண ஜோடி ஒன்று.

திருமணங்களை வித்தியாசமாக, விந்தையாக, வியக்கவைக்கும் வகையில் எல்லாம் செய்து கொள்வதில் வெளிநாட்டவருக்கு ஈடு அவர்களே.

ஆனால் அதற்கு நாங்களும் சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்று கூறும் வகையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த காதல் ஜோடி தங்களின் திருமணத்தை பாம்பு மாலை மாற்றி முடித்துள்ளனர்.

மணமகன் சித்தார்த், மணமகள் ஸ்ருஷ்டி இருவருமே மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இருவருமே வனத்துறையில் பணியாற்றுகின்றனர் என்பது கூடுதல் தகவல்.

திருமணத்தில் மாலை மாற்றலாம், மோதிரம் மாற்றலாம். இரு இதயங்கள் ஓரிதயமாக்க எதை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் இந்த ஜோடி பாம்பை மாலைபோல் கழுத்தில் போட்டு திருமணம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் 2010ல் நடந்துள்ளது.
வீடியோ என்னவோ இப்போது வைரலாகி வருகிறது.

முதலில் மணப்பெண் பாம்பு மாலையை மணமகன் கழுத்தில் போடுகிறார். பின்னர் மணமகன் ராஜநாக பாம்பை மணமகளின் கழுத்தில் போடுகிறார். திருமணத்திற்கு பின் பாம்புகள் வனத்துக்குள் விடப்பட்டனவாம்.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

இருப்பினும் அந்தக் காட்சிகள் பார்ப்பதற்கே பகீர் என்ற உணர்வை உருவாக்குகிறது.

Related articles

Recent articles

spot_img