சிறு குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை..!

vicks - 2026

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சுய நினைவு இல்லாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் அழைத்து வரப்பட்ட சிறுமியின் சுவாசக் குழாயில் இருந்த விக்ஸ் டப்பாவை அகற்றி சிறப்பு மருத்துவக் குழுவினர் உயிர் பிழைக்க வைத்துள்ளனர்.

சென்னை மேடவாக்கம் பகுதியில் வசிப்பவர் சோபன்பாபு. தனியார் நிறுவன ஊழியர். இவர், தனது சொந்த ஊரான, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில் உள்ள வீட்டுக்கு குடும்பத்துடன் வந்துள்ளார்.

இந்நிலையில், அவரது 2 வயது மகள் ஹர்ஷினி, சிறிய அளவிலான ‘விக்ஸ் டப்பா’வை வைத்துக்கொண்டு கடந்த 28-ம் தேதி இரவு விளையாடி உள்ளார்.

அப்போது, எதிர்பாராமல் டப்பாவை விழுங்கியபோது, தொண்டையில் சிக்கி கொண்டது. இதையறிந்த அவரது குடும்பத்தினர், விக்ஸ் டப்பாவை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், வெளியே எடுக்க முடியவில்லை.

அதன்பிறகு, தானிப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மறுநாள் (29-ம் தேதி) சிறுமி ஹர்ஷினியை அழைத்து சென்றனர். அங்கு பணியில் இருந்த மருத்துவர், டப்பாவை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டும் பலனில்லை. இதற்கிடையில் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்தது. அவரது சுவாசம் மெல்ல மெல்ல குறைந்துள்ளது.

harshini - 2026

இதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அப்போது அவர், சுய நினைவு இல்லாமல் இருந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த, காது, மூக்கு -தொண்டை சிறப்பு மருத்துவர் கமலக்கண்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், அறுவை சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று, சிகிச்சையை தொடங்கினர்.

சிறுமிக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கான கால அவகாசம் இல்லாததால், ‘LARYNGOSCOPY’ முறையில் சிகிச்சை அளித்து, சுவாசக் குழாயில் சிக்கியிருந்த விக்ஸ் டப்பாவை வெளியே எடுத்தனர்.

மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த சிறுமி, மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பினார். இதற்கிடையில், சிறுமிக்கு மூச்சுத் திணறல் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதால், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மருத்துவர்கள் கூறும்போது, ‘குழந்தைகளை பெற்றோர் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். சிறிய பொருட்கள், நாணயங்கள் உள்ளிட்டவற்றை விளையாட கொடுக்கக் கூடாது. அதனை குழந்தைகள் விழுங்கும்போது, ஆபத்தாக முடிந்துவிடும்.

மேலும், குழந்தையின் தொண்டையில் ஏதாவது பொருட்கள் சிக்கிக் கொண்டால், குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். காலம் தாழ்த்துவது உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிடும்’ என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories