lion - 2026

3 சிங்கங்களிடம் மாட்டிய முதலை.. ஆனாலும் விடலை..!

சற்றுமுன் அடடே... அப்படியா? பொது தகவல்கள்
lion - 2026

3 சிங்கங்கள் தங்கள் பசியை போக்க முதலையை தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், சிங்கக் கூட்டத்திற்கும், முதலைக்கும் இடையே கடுமையான சண்டை நடைப்பெறுகிறது. முதலில் ஒரு சிங்கம் முதலையை வேட்டையாட அதனுடன் சண்டையிடுகிறாது.

ஆனால், முதலையும் தனது உயிரை காத்துக்கொள்ள சிங்கத்தை பலம்கொண்ட மட்டும் எதிர்த்து போராடுகிறது. எனவே அந்த சிங்கத்தால் தனியாக போராடமுடியவில்லை.

எனவே மேலும் இரண்டு சிங்கங்கள் தாவி குதித்து வந்து அந்த சிங்கத்துடன் இணைந்து முதலையை வேட்டையாட முயற்சிக்கிறது.

ஆனால், முதலையானது சிங்கங்கள் முன் பணிவதற்கு பதிலாக, அவர்களுடன் சரிக்கு சமமாக சண்டையிடுவதை நம்மால் காணமுடிகிறது.

முதலையின் எதிர்த்து போராடும் குணத்தை கண்டு திகைத்த சிங்கங்களும் முதலையை பிடிப்பதில் முனைப்புடன் போராடி கிட்டத்தட்ட வெற்றியடைந்த நிலையில் முதலையானது சிங்கங்களின் பிடியில் இருந்து தன்னை லாவகமாக விடுவித்துக்கொள்கிறது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். கடைசி வரை தனது உயிரை காத்துக்கொள்ள போராடும் முதலையின் விடா முயற்சியையும், தைரியத்தையும் மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.