கேர்ள்ஸ் இருவர் சேர்ந்து வாழ கேரள நீதிமன்றம் அனுமதி!

Published:

athila patima - 2026

ஓரினச் சேர்க்கை காதலர்கள் ஒன்றாகச் சேர்ந்து வாழக் கேரள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கேரளா மாநிலம் ஆலுவா பகுதியைச் சேர்ந்த ஆதிலா, கோழிக்கோட்டைச் சேர்ந்த பாத்திமா நூரா ஆகியோரின் குடும்பத்தினர் நட்பாகப் பழகி வந்துள்ளனர் .

இதையடுத்து தோழிகள் இருவரும் சவூதி அரேபியாவில் ஒன்றாகப் படிக்கச் சென்றுள்ளனர் . அங்கு இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது . பின்னர் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர் .

இது பற்றி அறிந்த இருவரது குடும்பமும் அவர்களைப் பிரித்து வைத்துள்ளது . பின்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியே தொண்டு நிறுவனம் ஒன்றில் தஞ்சம் அடைந்தனர் .

அப்போது அங்கு வந்த பாத்திமாவின் உறவினர்கள் அவரை கடத்தி சென்றனர் . இது குறித்து ஆதிலா காவல்நிலையத்தில் புகார் அளித்தார் . இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர் .

இதையடுத்து ஆதிலா கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் . இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் , ஆதிலா நஸ்ரினும் , பாத்திமா நூராவும் சேர்ந்து வாழலாம் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளனர் .

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img