train service - 2026

8 எக்ஸ்பிரஸ்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி: தெற்கு ரயில்வே!

சற்றுமுன் அடடே... அப்படியா? இந்தியா
train service - 2026

சேலம் வழியாக செல்லும் 8 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் சூரமங்கலம் ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக ரயில்வே நிர்வாகம் ரயில்களில் கூடுதல் பெட்டிகளை இணைத்து இயக்கி வருகிறது.

அந்த வகையில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, போத்தனூர் வழியாக செல்லும் 8 ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டியை கூடுதலாக இணைத்து நிரந்தரமாக இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி மங்களூரு சென்ட்ரல்-சென்னை சென்ட்ரல் (வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்) நேற்று முதல் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி ஒன்று இணைத்து இயக்கப்பட்டது.

சென்னை சென்ட்ரல்-மங்களூரு சென்ட்ரல் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் சனிக்கிழமை முதலும், சென்னை சென்ட்ரல்-மங்களூரு சென்ட்ரல் ரயிலில் இன்று (வியாழக்கிழமை) முதலும், மங்களூரு சென்ட்ரல்-சென்னை சென்ட்ரல் ரயிலில் நாளை (வெள்ளிக்கிழமை) முதலும் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்.

திருவனந்தபுரம்-ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று முதலும், ஷாலிமர்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் 5ஆம் தேதி முதலும், கன்னியாகுமரி-ஸ்ரீ மத்தா வைஷ்ண தேவி காத்ரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் நாளை முதலும், ஸ்ரீ மத்தா வைஷ்ண தேவி காத்ரா-கன்னியாகுமரி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் வரும் 6ஆம் தேதி முதல் கூடுதலாக இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைத்து இயக்கப்பட உள்ளன. இந்த தகவலை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.