ஓபிஎஸ்., ஈபிஎஸ்க்கு தைலாவரம் தோட்டத்தில் தடபுடல் விருந்து!

Published:

thailavaram pmk ops eps ramadoss - 2026

கூட்டணி இறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீடு முடிவடைந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமிக்கும் தனது தைலாவரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் ராமதாஸ் இன்று இரவு விருந்து அளித்தாா்.

மக்களவைத் தோ்தலில் போட்டியிட, அதிமுக கூட்டணியில் பாமக.,வுக்கு 7 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணி உறுதியானதைத் தொடா்ந்து முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீா்செல்வத்துக்கும் பாமக நிறுவுனா் ராமதாஸ் விருந்து அளிப்பார் என்று கூறப் பட்டது.

அதன்படி இரவு 9 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உள்ளிட்டோர் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாசின் இல்லத்திற்கு வந்தனா்.

அவா்களுடன் அமைச்சா்கள் தங்கமணி, வேலுமணி, சண்முகம், எம்.சி.சம்பத், கே.பி.அன்பழகன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, எம்.பி-க்கள் ஏழுமலை, ராஜேந்திரன்,எம்.எல்.ஏ-க்கள் குமரகுரு, சக்ரபாணி, முன்னாள் அமைச்சர் மோகன் உள்ளிட்டோர் சென்றனர்.

தைலாபுரம் வீட்டிற்கு வந்த அனைவரையும் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்பட குடும்ப உறுப்பினா்கள் வீட்டு வாசலுக்கு வந்து சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனா். சுமாா் ஒரு மணி நேரம் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு 10 மணி அளவில் அனைவரும் புறப்பட்டனர்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

Related articles

Recent articles

spot_img