செல்போனில் வந்த மெசேஜ்! இப்படி பண்ணுங்க.. அப்படியே செய்த கல்லூரி மாணவி.. ரூ 85600 பறிபோன பரிதாபம்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
cell

குமாரபாளையத்தில், நூதன முறையில் கல்லூரி மாணவியிடம் பணம் பறிக்கப்பட்டது. குமாரபாளையத்தைச் சேர்ந்தவர் சவுந்தர்யா, 19. தனியார் பார்மசி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார்.

இவரது போனுக்கு, ‘suspected’ என்ற தகவல் வந்து கொண்டே இருந்துள்ளது. சற்று நேரத்தில் ஒருவரிடமிருந்து போன் வந்தது. எதிர்முனையில் பேசியவர், உங்கள் போனில் வந்த வார்தையை, ‘கிளிக்’ செய்து, ‘sucess’ என்று கொடுக்க சொல்லியுள்ளார்.

அவர் சொன்னபடி செய்ய, இவரது வங்கி கணக்கிலிருந்து, 85 ஆயிரத்து, 600 ரூபாய் எடுத்ததாக தகவல் வந்துள்ளது. குமாரபாளையம் போலீசார், சைபர் கிரைமில் புகார் தர சொல்லியுள்ளனர். தொடர்ந்து, எஸ்.பி.,யிடம் போன் மூலம் தகவல் அளித்தள்ளார். சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.