ஓய்வூதியர்களுக்கு நல்ல செய்தி.. நீதிமன்ற உத்தரவு..!

pention - 2026

பென்சன் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் முக்கிய வழக்கில் உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவா மாநில அரசு, அரசு ஊழியர்களுக்கு 60 வயதுக்கு பதிலாக 58 வயதில் பணி ஓய்வு வழங்கியுள்ளது.

இதையடுத்து, மீதமுள்ள 2 ஆண்டுகளுக்கு தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியம் வழங்கப்பட வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கில், மனுதாரர்களான அரசு ஊழியர்களுக்கு 2 ஆண்டுகளுக்கான ஊதியம் வழங்கப்பட தேவையில்லை எனவும், பென்சன் நிலுவைத் தொகையும் வழங்கப்பட தேவையில்லை எனவும் மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்த அரசு ஊழியர்கள் மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

Court - 2026

இந்நிலையில் இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

மேலும், நீதிமன்றத்தை நாடுவதில் தாமதம் ஏற்பட்டதாலேயே பென்சன் வழங்காமல் தவிர்க்க முடியாது என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்களுக்கு 60 வயது முதல் திருத்தப்பட்ட விகிதத்தில் பென்சனும், முந்தைய இரண்டு ஆண்டுகளுக்கான பென்சன் நிலுவைத் தொகையும் நான்கு வாரங்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் 60 வயதில் பணி ஓய்வு பெற்றிருக்கக்கூடும் என்பதால் அவர்களுக்கு பென்சன் நிலுவைத் தொகை வழங்கக்கூடாது என்பதும், திருத்தப்பட்ட விகிதத்தில் பென்சன் வழங்கக்கூடாது என்பதும் நியாயமற்றது என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வாயிலாக கோவா அரசு ஊழியர்கள் மட்டுமல்லாமல், மற்ற மாநிலங்களில் இதே பிரச்சினையை சந்திக்கும் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கும் நிவாரணம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories