02-06-2023 11:05 AM
More

    Shut up. Shall We?

    A Centenary Plus, Retold 

    Homeசற்றுமுன்இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சம்..தடுப்பூசி போடுவதில் மக்கள் ஆர்வம்..
    spot_img

    சினிமா...

    Featured Articles

    To Read in Indian languages…

    இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சம்..தடுப்பூசி போடுவதில் மக்கள் ஆர்வம்..

    இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியுள்ளது.

    இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,

    இந்தியாவில் புதிதாக 3,962 பேர் பாதித்துள்ளனர்.இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,31,72,547 ஆக உயர்ந்தது. புதிதாக 26 பேர் இறந்துள்ளனர்.

    இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,677 ஆக உயர்ந்தது.தொற்றில் இருந்து ஒரே நாளில் 2,697 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,25,454 ஆக உயர்ந்துள்ளது.

    இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.74% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.05% ஆக குறைந்துள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 22,416 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்தியாவில்  1,93,96,47,071 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 11,67,037 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    thirteen + eleven =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Follow us on Social Media

    19,023FansLike
    389FollowersFollow
    84FollowersFollow
    0FollowersFollow
    4,766FollowersFollow
    17,300SubscribersSubscribe

    ஆன்மிக