காஷ்மீர் பாதுகாப்பு படை என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொலை..

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் எடுத்து வரும் கடும் நடவடிக்கைகளில், தீவிரவாதிகள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளான லஷ்கர்- இ- தொய்பா, ஜெய்ஷ் – இ – முகமதுவை சேர்ந்த தீவிரவாதிகள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே ஜம்மு காஷ்மீரில் வெளிநாடுகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை பாதுகாப்பு படைகள் கொன்றுள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள விரக்தியால், பொதுமக்கள், போலீசார், அரசு ஊழியர்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்று, பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

ஜம்மு- காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் ரிஷிபுரா  பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது திடீரென துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கு இடையே பல மணி நேரம் துப்பாக்கிச்சூடு நீடித்தது. இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான்.

கொல்லப்பட்ட பயங்கரவாதி ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி நிசர் கான்டெ என்பது தெரிய வந்துள்ளது. பயங்கரவாதியிடமிருந்து துப்பாக்கி, வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்பு படையினர் 3 பேர், பொதுமக்களில் ஒருவர் என மொத்தம் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.என்கவுண்டர் நடந்த பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதால் துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.

images 89 - 2026
images 88 1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories