FB IMG 1654419877735 - 2026

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயிலுக்கு தென்காசி,ஶ்ரீவில்லிபுத்தூர் , நிறுத்தம் தேவை..

சற்றுமுன்

செங்கோட்டை ராஜபாளையம் வழியாக, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி-எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு இரயில்(06035/06036) நேற்று இரவு முதல் இயங்கி வரும் நிலையில் இந்த ரயிலுக்கு தென்காசி ஶ்ரீவில்லிபுத்தூர் சிவகங்கை நிறுத்தம் இல்லாதது பயணிகள் மத்தியில் பெரும் அதிருப்தி யை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்லீப்பர், 3அடுக்கு ஏ/சி,  2அடுக்கு ஏ/சி வகுப்புகள் உள்ளன.மத்திய கேரளா மற்றும் தமிழகத்தின் கிழக்கு டெல்டா மாவட்ட ஊர்களுக்கு நம் ஊர் வழியாக நேரடி இணைப்பு கிடைத்துள்ளது.இந்த விரைவு ரயில் கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரை, காயங்குளம், சாஸ்தான்கோட்டை, கொல்லம், குந்தாரா, கொட்டாரக்கரை, புனலூர், தென்மலை, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், இராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ரயில்நிலையங்களில் நின்று செல்லும்.

ஆனால் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி சிறப்பு ரயிலுக்கு தென்காசி,ஶ்ரீவில்லிபுத்தூர்  நிறுத்தம் இல்லை என்பது ரயில் பயணிகளிடம் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாவட்ட தலைநகரம்,சாரல் நகரம்
,அருவிகளின் மாவட்டம்
,செங்கோட்டை விருதுநகர் வழிதடத்தில் பயணிகள் எண்ணிக்கையிலும் வருவாயிலும் முதலிடம்,கேரளாவுக்கு செல்லும் ரயில்களுக்கான முதன்மையான சந்திப்பு,பராக்கிரம பாண்டியனால் கட்டியெழுப்பப்பட்ட தென்காசி காசிவிசுவநாதர் கோயில் கொண்ட நகரம் ,3000 ச. கிமீ பரப்பளவு கொண்ட மாவட்டம்
,15 லட்சம் மக்கள் வசிக்கும் மாவட்டம்
இதுவரை தென்காசியில்  எந்த ஒரு ரயிலும் நிற்காமல் சென்ற வரலாறு இல்லை 60 சதவீதம் விவசாயத்தை நம்பியுள்ள மாவட்டம் இப்படி பல்வேறு சிறப்பு கொண்ட  தென்காசியில் ஒரு சிறப்பு ரயில் நிற்காமல் செல்லப் போகிறது என்பதை பலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நேற்று ஜூன் 4 ம் தேதி முதல் துவங்கி  ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை 10 சேவைகள் இயக்கப்பட இருக்கும், எர்ணாகுளம் –  வேளாங்கண்ணி -எர்ணாகுளம் ரயில் தென்காசியில் நிற்காது.மேலும் இந்த ரயில் தமிழகத்தில் மிக பிரபலமான கோயில் நகரம் ஶ்ரீவில்லிபுத்தூர் சிவங்கையிலும் நிற்காது.இந்த ரயிலை தென்காசி ஶ்ரீவில்லிபுத்தூர் சிவகங்கை யில் நின்று செல்ல நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.

எர்ணாகுளம்-நாகப்பட்டிணம் (வேளாங்கண்ணி) சிறப்பு இரயில்
நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி இடையே இரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக  ஏற்கனவே அறிவிக்கப்பட்ட எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு இரயில் தற்காலிகமாக “எர்ணாகுளம்-நாகப்பட்டினம்” வரை மட்டுமே இயக்கப்படும். என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் இரயில் நிலையம் முதல் வேளாங்கண்ணி மாதா ஆலயம் – 13  கி.மீ.தூரம் மட்டுமே ஆகும்.விரைவில் வழக்கம் போல் வேளாங்கண்ணி இரயில் நிலையம் வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FB IMG 1654419877735 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.