728141 chennai 03 - 2026

16 மாநிலங்களவை எம்பி பதவி தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவக்கம்..

சற்றுமுன்

16 மாநிலங்களவை எம்பி பதவி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 16 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாடு உட்பட 11 மாநிலங்களில் 41 எம்.எல்.ஏ.க்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால் எஞ்சிய 16 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

மாநிலங்களவையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு 10-ந் தேதி (இன்று) தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே  அறிவித்தது. அதன்படி, கர்நாடகா, அரியானா, ராஜஸ்தான், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடத்திற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 9மணிக்கு துவங்கி  நடைபெற்று வருகிறது .

தமிழகம் உட்பட 11 மாநிலங்களில் 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகி உள்ள நிலையில், மீதமுள்ள இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. ஓட்டுப்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கியது. மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும் மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. 7 மணிக்கு முடிவுகள் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

728141 chennai 03 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.