images 70 - 2026

பீஹார்-கார் குளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பலி..

சற்றுமுன்

பீஹார் மாநிலத்தில் கார் ஒன்று குளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.

பீஹாரின் பூர்னியா மாவட்டத்தில் கஞ்சியா கிராமத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. தரபாடியில் இருந்து புறப்பட்டு கிஷான்கஞ்ச் நோக்கி சென்ற அந்த கார் வெள்ளிக்கிழமை இரவு திடீரென சாலையில் இருந்து விலகி அருகேயிருந்த குளத்திற்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் நீரில் மூழ்கி 8 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு சென்ற போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை 8 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

images 70 - 2026
images 69 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.