சதுரகிரி கோவிலில் பிரதோஷம் காண திரண்ட பக்தர்கள் ..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

பிரதோஷத்தை முன்னிட்டு இன்று சதுரகிரி கோவிலில் திரண்ட பக்தர்களால் மலையில் கூட்டம் அதிகமாக இருந்தது. விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகளவில் இருந்தது. சுவாமிக்கு பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். மாதத்தில் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

இன்று வைகாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகம் கேரளம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மதுரை, தேனி, திண்டுக்கல், சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்ட ங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் அதிகாலை முதலே மலை அடிவாரமான குவிந்தனர். காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சென்றனர்.

விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகளவில் இருந்தது. பிரதோஷத்தை முன்னிட்டு இன்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால்,பழம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு பிரதோச சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் சுவாமிக்கு பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு தேவை யான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

images 60 1 - 2026
ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

Related articles

Recent articles

spot_img