அசுவனிமுதல் வருகிற 27 நட்சத்திர வரிசையில் இருபத்தி ஐந்தாவது நட்சத்திரம் பூரட்டாதி. இது குருவின் நட்சத்திரம். இதன் முதல் மூன்று பாதங்கள் கும்ப ராசியிலும், இறுதி பாதம் மீன ராசியிலும் அமைந்திருக்கும். இது ஒரு ஆண் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறப்பவர்கள் உயர்ந்த எண்ணம் கொண்டவர்கள். விட்டுக் கொடுத்தாலும் கட்டுப்படாதவர்கள். சில சமயம் சமாதானப் பிரியர். பலசமயம் சண்டை பிரியர்கள். மூஞ்சில் அடித்த மாதிரி பேசிவிடுவார்கள். பார்ப்பதற்கு பரம சாதுபோல் காட்சியளிப்பார்கள். அவர்களின் உண்மை குணமும் அதுதான். ஆனால் சிங்கத்தை சீண்டினால் விளைவு வேறுவிதமாகத்தான் இருக்கும்.



