நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம் என்றார்கள். குடும்பத்தை ஏன் பல்கலைகழகத்தோடு ஒப்பிட வேண்டும். பல்கலைகழகத்தில் கற்பித்து கொடுக்கப்படுகிறது. கற்றுக்கொள்ள முடிகிறது. குடும்பத்தை அதனோடு ஒப்பிட்டதற்கும் அதுதான் காரணம். தினமும் பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். உறவுகளை கையாள்வது எப்படி? வெற்றிகரமாக இல்லறத்தை நடத்துவது எப்படி? என்று கற்றுக் கொள்ள வேண்டும். மேலும் பிள்ளைகளுக்கு நல்லதை கற்றுக் கொடுக்க வேண்டும். அதனால்தான் குடும்பத்தை பல்கலைகழகம் என்றார்கள்.
எந்த ஒரு குடும்பதிலும் எதிரொலிப்பது விரல் விட்டு எண்ணக்கூடிய விஷயங்கள்தான். பொருளாதார பிரச்சனைகள் இருக்கலாம். அதனால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் இருக்கலாம். கணவனின் சில எதிர்பார்ப்புகளை மனைவி நிறைவேற்றாமல் இருக்கலாம். மனைவியின் சில ஆசைகளை கணவன் அலட்சியப்படுத்தலாம். அதன் பொருட்டு பிரச்சனைகள் தலை தூக்கலாம்.
மாமனார், மாமியார், நாத்தனார், கொழுந்தன் தொடர்பான உறவு சிக்கல்கள் தோன்றலாம். சில குடும்பங்களில் சந்தேக நோய் பாடாய்படுத்தலாம். இதை தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஆணாதிக்கம் பற்றிய பேச்சு அல்லது பெண்ணாதிக்க பேச்சு குடும்பத்தை அலைகழித்துக் கொண்டிருக்கும். படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் இடத்திற்கு தகுந்தபடி பிரச்சனைகள், இதனை அடிப்படையாக வைத்து வருவதுதான். தலைக்கணம், கர்வம், ஈகோ என்பதெல்லாம் இதனை ஒட்டிய வார்த்தைகள்தான்.
கணவன் மனைவி உறவு மேம்பட
Popular Categories



