முக்கிய மின்சார ரயில் முழுவதும் குளிர்சாதன பெட்டிகளுடன் இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்..

சென்னை மெட்ரோ ரெயில் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் இயக்கப்படுவதுபோல் முக்கிய மின்சார ரயில் பயணிகள் ரயில் முழுவதும் குளிர்சாதன பெட்டிகளுடன் இயக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

புறநகர் மின்சார ரெயில்களிலும், பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை செய்து கொடுக்க ரெயில்வே வாரியம் முன்வந்துள்ளது.

இந்த நிலையில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே குளிர்சாதன வசதியுடன் மின்சார ரெயில் தேவை என்ற கோரிக்கை பயணிகள் மத்தியில் எழுந்துள்ளது.

இது அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் கடற்கரை-செங்கல்பட்டு இடையே குளிர்சாதன வசதி மின்சார ரெயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு தெற்கு ரெயில்வேக்கு கடிதம் மூலம் தெரிவித்து உள்ளது.

இந்த மார்க்கத்தில் அதிக அளவு பயணிகள் மின்சார ரெயிலை பயன்படுத்துகிறார்கள். அதிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் அலுவலகம் செல்லக்கூடியவர்களின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் இவ்வேளையில் குளிர்சாதன மின்சார ரெயில் இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்ப்பதாக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

குளிர்சாதன வசதியுள்ள பெட்டிகள் இதற்கு தேவைப்படுவதால் அதனை தயாரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான செயல்திட்டம், இயக்கம் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் ரெயில்வே அதிகாரிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மாநில அரசின் தேவை குறித்து ரெயில்வே வாரியத்துக்கு தெற்கு ரெயில்வே விரைவில் கடிதம் அனுப்ப முடிவு செய்துள்ளது. ஏ.சி. மின்சார ரெயில் தேவையின் அவசியத்தையும், அதற்கான செலவு மற்றும் திட்ட மதிப்பீட்டை ஆய்வு செய்யவும் இந்த திட்டத்துக்கு அனுமதி வழங்கவும் வலியுறுத்தப்படுகிறது.

இது குறித்து முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி குகநாதன் கூறுகையில்,

கடற்கரை-செங்கல்பட்டு இடையே ஏ.சி. மின்சார ரெயில் இயக்க வேண்டும் என்று மாநில அரசு கோரியுள்ளது. அதன் அடிப்படையில் இதற்கான அனுமதி பெற ரெயில்வே வாரியத்துக்கு கடிதம் எழுதப்பட உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் இந்த பணி தொடங்கும் என்றார்.

கடந்த சில ஆண்டுகளாக ஏ.சி. மின்சார ரெயில் தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து ஏ.சி. மின்சார ரெயில் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளது. மும்பையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புறநகர் மின்சார வழித்தடத்தில் ஏ.சி. ரெயில் பெட்டி பயன்படுத்தப்படுகிறது
மும்பையை தொடர்ந்து சென்னையிலும் ஏ.சி. மின்சார ரெயில் சேவை வெற்றிகரமாக அமையும். காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் முதல் கட்டமாக இயக்கினால் பயன் உள்ளதாக இருக்கும் என்று பயணிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

images 7 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories