கும்பகோணம்-5 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி இன்று வெட்டிக் கொலை..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

கும்பகோணம் அருகே சோழபுரத்தில் காதலித்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட புதுமண தம்பதி இன்று வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் சரண்யா. இவர் திருவண்ணாமலையை சேர்ந்த மோகன் என்பவரை காதலித்து கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருமணமா செய்து கொண்டனர். திருமணம் முடிந்து சென்னையில் தங்கியிருந்த நிலையில் பிரச்சனை வேண்டாம் என கூறி சரண்யாவின் குடும்பத்தினர் அவர்களை விருந்துக்கு அழைத்தனர்.

இதனை ஏற்று சொந்த ஊர் வந்த தம்பதியினர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். 5 நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்த சரண்யா, அவரது கணவர் மோகன் ஆகியோர் ஊர் திரும்பிய நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளதால் சோழபுரம் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

TNJ honour killing nn - 2026
1655126118599 - 2026

2 போரையும் வெட்டிக் கொலை செய்து விட்டு சரண்யாவின் சகோதரர் சக்திவேல் மற்றும் அவரது நண்பர் ரஞ்சித் தலைமறைவாகி உள்ளார். சரண்யாவுக்கு அவரது சகோதரர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்திருந்த நிலையில் காதல் திருமணம் செய்ததால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக்க கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட சரண்யா – சேகர் ஜோடி ஜாதி மறுப்பு திருமணம் செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. கொலை செய்யப்பட்ட சரண்யா, கணவர் சேகரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் கீழ்க்கண்ட விபரம் தெரியவந்துள்ளது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

சரண்யாவின் காதல் அவரது வீட்டுக்கு தெரிய வந்ததால், அவரது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சரண்யாவின் சகோதரரான சக்திவேல் தனது மைத்துனர் ரஞ்சித் என்பவருக்கு சரண்யாவை திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்துள்ளார்.

இதனை அறிந்த சரண்யா, கடந்த 5 நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி, மோகனுடன் திருமணம் செய்துகொண்டு சென்னையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் புதுமணத் தம்பதிகளை விருந்துக்கு அழைப்பதாக கூறி அவரது சகோதரர் சக்திவேல்  வீட்டிற்கு வரவழைத்துள்ளார். இதனை நம்பி சரண்யா மற்றும் மோகன் இருவரும் வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது புதுமணத் தம்பதிகள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன் இருவரும் தண்ணீர் கொடுத்துள்ளனர்.  தண்ணீரை வாங்கி தம்பதிகள் குடித்த போது அவரது சகோதரர் சக்திவேல் மற்றும் மைத்துனர் ரஞ்சித் ஆகிய இருவரும் புதுமணத் தம்பதிகளை வெட்டி உள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இக்கொலை சம்பவம் குறித்து சோழபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு உடற்கூறு ஆய்விற்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

மேலும், கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெண்ணின் சகோதரர் சக்திவேல் மற்றும் மைத்துனர் ரஞ்சித் இருவரும் கும்பகோணம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

1655126132902 - 2026

Related articles

Recent articles

spot_img