சரத் பவாரை சந்தித்த மம்தா பானர்ஜி ..

இந்திய ஜனாதிபதியாக பணியாற்றி வரும் ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் சரத் பவாரை மம்தா பானர்ஜி இன்று சந்தித்து பேசினார்.

புதிய ஜனாதிபதியை தேர்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தேர்தல் முடிவுகள் ஜூலை 21-ம் தேதி அறிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் யார்? என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. கேரள கவர்னரான ஆரிப் முகமது கானை ஜனாதிபதி வேட்பாளராக பாஜக நிறுத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, மேற்குவங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கும்படி 22 எதிர்க்கட்சிகள், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களின் முதல்-மந்திரிகளுக்கும் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

ALSO READ:  1 முதல் 9ம் வகுப்பு வரை... முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

மம்தா பானர்ஜி தலைமையில் நாளை டெல்லியில் நடைபெற உள்ள இந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் உள்பட பல்வேறு கட்சிகள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மு

ன்னதாக, ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. குறிப்பாக, மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவாரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. சரத் பவாரை எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. ஆனால், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சரத் பவார் விரும்பவில்லை என தேசியவாத காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், நாளை நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் தலைமை தாங்குவதற்காக மம்தா பானர்ஜி மேற்குவங்காளத்தில் இருந்து இன்று டெல்லி வந்தார்.

732163 pa - 2026

டெல்லி வந்த மம்தா பானர்ஜி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக போட்டியிடும்படி சரத் பவாரிடம் மம்தா பானர்ஜி கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்ற தனது அழுத்தமான முடிவில் இருந்து சரத் பவார் பின்வாங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாளை எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் சரத் பவாரை மம்தா பானர்ஜி சந்தித்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories