நின்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்த வாகனம் மோதி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம்..

தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வந்து டாடா ஏஸ் வாகனம் மோதியதில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாவட்டத்தை அடுத்த வாஞ்சூர் பகுதியை சேர்ந்த தீனா, நாகராஜ், மதன் குமார் உள்ளிட்ட 7 பேர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவிற்கு சென்றுவிட்டு மாடுகளோடு டாடா ஏஸ் வாகனத்தில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.அப்போது சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்னால் சென்று மோதியதில் டாடா ஏஸ் வாகனத்தில் வந்த தீனா, நாகராஜ், மதன் குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்கள்.

மேலும் படுகாயமடைந்த நால்வரும் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்கள். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாற்றம்பள்ளி காவல்துறையினர் 3 பேரின் சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக நிகழ்ந்த விபத்தா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோர விபத்தால் நாட்றம்பள்ளி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு நிலவியது.

Tamil News large 3057197 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories