12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.76 %10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 90.07 % பேர் தேர்ச்சி..

Published:

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மொத்தம் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகளை வெளியிட்டார் இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தெரிவித்துள்ளதாவது,
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 93.76 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.32 சதவீதம் பேரும், மாணவர்கள் 90.96 சதவீதம் பேரும் தேர்வாகி உள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 5.36 சதவிதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்தம் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 94.38 சதவீதம் பேரும், மாணவர்கள் 85.83 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். ஜூன் 24 ந் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைபெறலாம்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?
IMG 20220620 112130 - 2026

12ம் வகுப்பு பொதுத் தேர்வை 31 ஆயிரத்து 034 பேர் எழுதவில்லை. 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 42,519 பேர் எழுதவில்லை. 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மறு தேர்வு அடுத்த மாதம் 25ந் தேதி நடைபெறும். 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆக்ஸ்ட் மாதம் 2ந் தேதிமுதல் மறு தேர்வு நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.95% மாணவர்கள் தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 97.27% மாணவர்கள் தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 2வது இடம் பிடித்துள்ளது. 97.02% மாணவர்கள் தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் 3வது இடம் பிடித்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.22% தேர்ச்சி பெற்று குமரி மாவட்டம் முதலிடமும், 97.12% தேர்ச்சி பெற்று பெரம்பலூர் மாவட்டம் 2வது இடமும், 95.96% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் 3வது இடம் பிடித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

dtnext 2022 03 b4236bdf b635 4cf2 b339 838ccbc32c39 202202161251286403 Revision test marks for Class 10 12 not to affect final SECVPF - 2026
ALSO READ:  ஜெனகை மாரியம்மன் கோயிலில் ஆடிப்பூர வளையல் அணிவித்து வழங்கல்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img