நிறைந்தது செம்பரப்பாக்கம் ஏரி ..உபரி நீர் திறக்க முடிவு..

செம்பரப்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தண்ணீர் இருப்பை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,700 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி ஆகும். தற்போது பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருப்பதால், பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. மொத்த கொள்ளளவில் தற்போது 3475 மி.கன அடி தண்ணீர் உள்ளது. இது மொத்த நீர் இருப்பில 95 சதவீதம் ஆகும். இந்த நிலையில் நேற்று இரவு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து வரும் தண்ணீரோடு, மழை நீரும் சேர்ந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

இன்று காலை நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரிக்கு 1,700 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஏரியில் 23.36 அடிக்கு (மொத்த உயரம் 24 அடி) தண்ணீர் உள்ளது. வழக்கமாக செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு 23 அடியை தாண்டினால் உபரி நீர் திறக்கப்படுவது வழக்கம். தற்போது ஏரியில் 23 அடியை தாண்டி தண்ணீர் உள்ளதால் உபரி நீர் திறக்கப்படலாம் என்று தெரிகிறது. மேலும் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் அனுப்புவதையும் நிறுத்த முடிவு செய்து உள்ளனர். செம்பரப்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தண்ணீர் இருப்பை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். கோடை காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரி முழுவதும் நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

1715514 chembarambakkamlake - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories