கொரோனா காலத்தில் நிறுத்தம் செய்யப்பட்ட ரயில்களை மீண்டும் பாசஞ்சர் கட்டணத்தில் இயக்க பயணிகள் வலியுறுத்தல்..

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Published:

திருநெல்வேலி-மயிலாடுதுறை, செங்கோட்டை-மதுரை ரயில்கள் உட்பட கொரோனா காலத்தில் நிறுத்தம் செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கவும் பயணிகள் ‌ரயிலை விரைவு ரயில் கட்டணத்தில் இயக்குவதை தவிர்த்து பாசஞ்சர் கட்டணத்தில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

கொரோனா வால் நிறுத்தப்பட்ட ராமேஸ்வரம் – மதுரை, கொல்லம் – புனலூர், ரயில் ஜூன் 22முதலும் கன்னியாகுமரி – ராமேஸ்வரம்-கன்னயாகுமரி ஜூன்27முதல் இயங்குகிறது. நாகர்கோவில் – காச்சிகுடா வாராந்திர விரைவு ரயில் சேவை ஜூலை 2 முதல் மீண்டும் துவங்க இருக்கிறது.

images 43 - 2026

ராமேஸ்வரம் – மதுரை – ராமேஸ்வரம் முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் ஜூன் 22 முதல் இயக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் இந்த பகுதியில் மூன்று ஜோடி முன்பதிவில்லாத ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி ராமேஸ்வரம் – மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06652) ராமேஸ்வரத்திலிருந்து காலை 11.00 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.40 மணிக்கு மதுரை வந்து சேரும். மறுமார்க்கத்தில் மதுரை – ராமேஸ்வரம் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06653) மதுரையிலிருந்து மதியம் 12.30 மணிக்கு புறப்பட்டு மாலை 04.10 மணிக்கு ராமேஸ்வரம் சென்று சேரும் இந்த ரயில்கள் பாம்பன், மண்டபம், மண்டபம் கேம்ப், உச்சிப்புளி, வாலாந்தரவை, ராமநாதபுரம், சத்திரக்குடி, பரமக்குடி, சூடியூர், மானாமதுரை, ராஜகம்பீரம், திருப்பாச்சேத்தி, திருப்புவனம், சிலைமான், கீழ் மதுரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 9 இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு மற்றும் சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும்.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

கொல்லம் – புனலூர் – கொல்லம் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் ஜூன் 22 முதல் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி கொல்லம் – புனலூர் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06666) கொல்லத்தில் இருந்து மாலை 05.30 மணிக்கு புறப்பட்டு மாலை 06.55 மணிக்கு புனலூர் வந்து சேரும். மறுமார்க்கத்தில் புனலூர் – கொல்லம் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் (06661) புனலூரில் இருந்து இரவு 07.45 மணிக்கு புறப்பட்டு இரவு 09.05 மணிக்கு கொல்லம் சென்று சேரும். இந்த ரயில்கள் அவனீஸ்வரம், குறி, கொட்டாரக்கரா, எழுகோன், குன்டரா கிழக்கு, குன்டரா, சந்தன தோப்பு, கிளிகொல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ராமேஸ்வரம் – கன்னியாகுமரி – ராமேஸ்வரம் வாரம் மும்முறை சேவை அதிவிரைவு ரயில்கள் ராமேஸ்வரத்தில் இருந்து ஜூன் 27 முதலும் கன்னியாகுமரியில் இருந்து ஜூன் 28 முதலும் இயக்கப்பட இருக்கிறது. அதன்படி ராமேஸ்வரம் – கன்னியாகுமரி வாரம் மும்முறை சேவை அதிவிரைவு ரயில் (22621) ராமேஸ்வரத்திலிருந்து திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 04.15 மணிக்கு கன்னியாகுமரி சென்று சேரும். மறுமார்க்கத்தில் கன்னியாகுமரி – ராமேஸ்வரம் வாரம் மும்முறை சேவை அதிவிரைவு ரயில் (22622) கன்னியாகுமரியில் இருந்து செவ்வாய் வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 05.35 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும். ராமேஸ்வரம் – கன்னியாகுமரி ரயில் ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கன்னியாகுமரி – ராமேஸ்வரம் ரயில் நாகர்கோவில், வள்ளியூர், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுத்திய வசதி பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்படும்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!
FB IMG 1655688978092 - 2026

நாகர்கோவில் – காச்சிகுடா வாராந்திர விரைவு ரயில் சேவை ஜூலை 2 முதல் மீண்டும் துவங்க இருக்கிறது.

காச்சிகுடாவிலிருந்து முதல் சேவை ஜூலை 3 அன்று துவங்கும்.அதன்படி நாகர்கோவில் – காச்சிகுடா வாராந்திர விரைவு ரயில் (16354) நாகர்கோவிலில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 08.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 01.25 மணிக்கு கச்சக்குடா சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் காச்சிகுடா – நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயில் (16353) காச்சிகுடாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 03.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் இரவு 07.50 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்.

வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, குடியாத்தம், காட்பாடி, சித்தூர், திருப்பதி, ரேணிகுண்டா, கடப்பா, யெர்ரக்குன்ட்லா, தாடிபத்திரி, கூட்டி, கர்னூல்நகர், கட்வால், மெஹபூப் நகர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 5 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிக்கான பெட்டி, ஒரு சமையல் சாதனப்பெட்டி, ஒரு இரண்டாம் வகுப்பு மற்றும் சரக்கு பெட்டி இணைக்கப்படும்.நாகர்கோவில் – காச்சிகுடா ரயிலுக்கு யெர்ரக்குன்ட்லாவில் நிறுத்தம் கிடையாது.
இதுபோல் கொரோனா காலத்தில் நிறுத்தம் செய்யப்பட்ட திருநெல்வேலி-மயிலாடுதுறை, செங்கோட்டை-மதுரை ரயில்கள் உட்பட கொரோனா காலத்தில் நிறுத்தம் செய்யப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கவும் பயணிகள் ‌ரயிலை விரைவு ரயில் கட்டணத்தில் இயக்குவதை தவிர்த்து பாசஞ்சர் கட்டணத்தில் இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Related articles

Recent articles

spot_img