சென்னை: ஆளுநர் உரை சம்பிரதாய சடங்கான ஒன்றாக உள்ளது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக ஆளுர் உரை என்பது சம்பிரதாய சடங்காகவே நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருக்கிறது என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் ஆளுநர்உரையில் கூறியிருப்பது மிகுந்த கேலிக்குரியது. சமீபத்தில் வெளியான புள்ளி விவரங்களின்படி ஆதாயத்திற்கான கொலைகள் சென்னை மாநகரத்தில் அதிகாpத்து வருகிறது என்கிற அதிர்ச்சிசெய்தி வெளிவந்துள்ளது.வேளாண் உற்பத்தியில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று எந்த அடிப்படையில்கூறப்படுகிறது என்பதை தமிழக அரசுதான் விளக்க வேண்டும். கச்சத்தீவில் மீன்பிடி உரிமையைநிலைநிறுத்துவதன் மூலமே தமிழக மீனவா;கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும் என்றுஆளுநர் உரையில் கூறியிருப்பது பிரச்சினையின் தன்மையை திசை திருப்புவதாகும். மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என்பது இந்திய – இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை மூலமாகத்தான் காண முடியும் என்கிற அடிப்படையில்தான் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மின் உற்பத்தி கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 3,315 மெகாவாட்அதிகாpக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதற்கு எந்த அடிப்படையும் இல்லை. நமது மின் தேவையில்ஏறத்தாழ 3,000 மெகாவாட் பற்றாக்குறை இருந்து வருகிறது.சமீபத்தில் சென்னையில் நடந்த தொழில்துறையினர் மாநாட்டிற்கு தொழில் துறையினரிடமிருந்து பெருமளவு வரவேற்பில்லாமல் ஒருசிலரே பங்கேற்கிற நிலை ஏற்பட்டது. மே மாதம் நடக்கவிருக்கிற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்திற்கு 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு வருவதற்கு எந்த அடிப்படை வேலைகளையோ, அதற்கான சூழலையோ உருவாக்காமல் இருப்பது மிகுந்தஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கோயம்பேடு – அலந்துhர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படுவதற்கு தயார்நிலையில் இருக்கும் போது காலதாமதம் ஏற்படுவதற்கு என்ன காரணம் ?பொதுவாக ஆளுநர் உரை என்பது உப்பு சப்பு இல்லாத, வளர்ச்சியை நோக்கமாக கொள்ளாமல்

