சத்தி-மைசூர் சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகளால் பரபரப்பு..

சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த காட்டு யானைகள் காரை
தாக்கி தும்பிக்கையால் அடித்து சேதப்படுத்தி துவம்சம் செய்தது வாகன ஓட்டிகளை பதற்றத்துக்குள்ளாக்கிய‌ சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Elephant Sathyamangalam Mysore Forest National Highway - 2026

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் தமிழகம் மற்றும் கர்நாடகத்தை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகளும் வசிக்கின்றன. ஆசனூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அவ்வப்போது சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுகின்றன. 

இந்த நிலையில்  சனிக்கிழமை மாலை ஆசனூர் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய இரண்டு காட்டு யானைகள், குட்டியுடன் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த வாகனங்களை வழிமறித்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நீண்ட வரிசையில் நின்றிருந்த வாகனங்களின் நடுவே காட்டு யானைகள் சுற்றித் திரிந்தன. காட்டு யானைகளைக் கண்டு அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள் வாகனங்களை நீண்ட வரிசையில் நிறுத்தினர். 

இதைத் தொடர்ந்து, திடீரென வாகனங்களை காட்டு யானைகள் துரத்தத் தொடங்கியதால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் யானைகளிடமிருந்து தப்பிப்பதற்காக வாகனங்களை திருப்ப முயற்சித்தனர். அப்போது ஒரு வெள்ளை நிற காரை கண்டு அச்சமடைந்த காட்டு யானைகள் திடீரென காரை தும்பிக்கையால் தாக்கத் தொடங்கின. அப்போது காரில் இருந்து கீழே இறங்கிய ஒரு நபர் தப்பியோடினார். சிறிது நேரம் சாலையில் நடமாடிய காட்டு யானைகள் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றன. 

தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிய காட்டு யானைகள் திடீரென காரை தாக்கி தும்பிக்கையால் அடித்து சேதப்படுத்தியதால் அங்கு லேசான பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories