தொழில் ரீதியாக ரயிலில் பணம் கொண்டு வருபவர்களுக்கு உரிய ஆவணங்கள் அவசியம்..

உரிய ஆவணங்களின்றி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஜூன் மாதத்தில் மட்டும் ரூ.2.64 கோடி ஹவாலா பணங்கள் பிடிபட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பயணிகளின் உடைமைகளை ரயில்வே பாதுகாப்பு படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணி ஒருவர் கொண்ட வந்த பையின் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரைப் பிடித்து அவரது பையை ரயில்வே பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டபோது அவரது பையில் கட்டு கட்டாக பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் இருந்த பணத்துக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து பிடிபட்ட நபரை ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுரளி (53) என்பதும் அவர் கருவாடு வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது.

மேலும், அவர் கொண்டு வந்த பணத்தை எண்ணியபோது அதில் 78 லட்சம் ரூபாய் பணம் இருந்ததும், பணத்துக்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இது ஹவாலா பணமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வருமான வரித்துறையினருக்கு தகவல் தெரிவித்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தையும், பிடிபட்ட நபரையும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் அவர்களிடம் ஒப்படைத்தனர். ஏற்கனவே ஜூன் மாதத்தில் மட்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஹவாலா பணம் ரூ. 2,64,19,500, மற்றும் 40 லட்சம் மதிப்புடைய தங்கமும், எழும்பூர் ரயில் நிலையத்தில் 90 லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொழில் ரீதியாக பணம் கொண்டு வருபவர்கள் அந்த பணத்துக்கான உரிய ஆவணங்களை தங்களிடம் வைத்திருக்க வேண்டியது அவசியம் எனவும், அவ்வாறு உரிய ஆவணங்கள் இல்லாத பணம் எவ்வளவு மதிப்பாக இருந்தாலும் அது ஹவாலா பணம் என்ற அடிப்படையிலேயே கருதப்பட்டு, பறிமுதல் செய்யப்படும் எனவும் பின் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் எனவும் ரயில்வே பாதுகாப்புப்படை டி.எஸ்.பி ராஜு தெரிவித்துள்ளார்.

1656606211850 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories