கர்நாடகாவை சேர்ந்த ஷினி ஷெட்டி, ‘ஃபெமினா மிஸ் இந்தியா 2022’ பட்டத்தை வென்றார்.
மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ‘விஎல்சிசி ஃபெமினா மிஸ் இந்தியா வோ்ல்டு 2022’ பட்டத்திற்கு இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில் பல மாநிலங்களில் இருந்து 31 மாடல் அழகிகள் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியின் இறுதியாக கர்நாடாகா மாநிலத்தைச் சேர்ந்த ஷினி ஷெட்டி என்ற 21 வயது மாடல், ‘ஃபெமினா மிஸ் இந்தியா 2022’ பட்டத்தை தட்டிச்சென்றார். மேலும் முதல் ரன்னர் வெற்றியாளராக ராஜஸ்தானை சேர்ந்த ரூபல் ஷெகாவத்தும், இரண்டாம் ரன்னர் வெற்றியாளராக உத்தரப்பிரதேசத்தின் ஷினாதா சவுகானும் வெற்றி பெற்றனர்.
நடிகைகள் நேஹா தூபியா, மலாய்கா அரோரா, நடிகா் டினோ மோரியா, வடிவமைப்பாளா்கள் ரோகித் காந்தி, ராகுல் கன்னா, நடன இயக்குநா் ஷியாமக் தவாா், இந்திய மகளிா் கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோா் அழகிப் போட்டி இறுதிச் சுற்றின் நடுவா்களாக செயல்பட்டனா்.