3621d5648d1a1ff6e75987b548ef8ddc - 2026

அமெரிக்கா 246-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் துப்பாக்கி சூடு..ஐவர் பலி

சற்றுமுன்

அமெரிக்காவின் 246-வது சுதந்திர தினம் அங்கு கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுடெல்லி: அமெரிக்கா உருவான 246-வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்ச்சிகள் களை கட்டி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் 246-வது சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், அமெரிக்காவின் 246-வது சுதந்திர தினத்தில் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் அமெரிக்க மக்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் என பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கா உருவான 246-வது ஆண்டு தினத்தினை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்ச்சிகள் களை கட்டி வருகின்றன நிலையில், இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோ புறநகரில் உள்ள ஐலேண்ட் பூங்கா பகுதியிலும் சுதந்திர தின அணிவகுப்பு நடந்தது. அணிவகுப்பு தொடங்கிய பின் 10 நிமிடங்களில் திடீரென வந்த மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இதனால் அப்பகுதி மக்கள் அங்குமிங்கும் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பாதுகாப்புக்கு நின்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுதந்திர தின நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3621d5648d1a1ff6e75987b548ef8ddc - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.