புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் கிராமத்தில் உள்ள அய்யனார் கோயிலுக்கு கிராமத்தார்கள் சார்பில் மழை வேண்டி ஆண்டுதோறும் நடத்தப்படும் குதிரை எடுப்பு திருவிழா நடந்தது.
விழாவை முன்னிட்டு கிராமத்தார்கள் கோயிலில் இருந்து புறப்பட்டு குதிரை செய்யும் இடம் சென்று அங்கிருந்து குதிரையை எடுத்து வந்து கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர்.
இந்த வழிபாட்டில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு அறந்தாங்கி டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.




