ஐசிசி.,யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைந்தார் ராகுல் திராவிட்

இந்தியா சற்றுமுன் விளையாட்டு

Rahul Dravid - 2026

இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப் பட்ட ராகுல் திராவிட் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில்- ஐசிசி.,யின் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் இணைந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை நேற்று அயர்லாந்தின் டப்ளின் நகரத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் திராவிட், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்டிங், இங்கிலாந்து மகளிர் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் கிலைர் டெய்லர் ஆகியோர் ஐசிசி-யின் `ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.

இந்திய கிரிக்கெட் வீரர்களான கபில்தேவ், அணில் கும்ப்ளே, சுனில் காவஸ்கர், பிஷன் சிங் பேடி ஆகிய இந்திய வீரர்கள் இந்தப் பட்டியலில் முன்னர் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் நால்வரை அடுத்து ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைந்த ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையை ராகுல் திராவிட் பெற்றுள்ளார்.

ராகுல் திராவிட், இந்திய அணிக்காக 164 டெஸ்டுகள் மற்றும் 344 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரன்களும், ஒரு நாள் போட்டிகளில் 10,889 ரன்களும் அடித்துள்ளார். இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், இந்திய அணி கேப்டனாகவும் தனது பங்களிப்பை திறம்படச் செய்துள்ளார் திராவிட்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.