இலங்கைக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்று வருகிறது, இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
முதல் நாள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் குவித்துள்ளது. விராட்கோலி 156, ரோகித் சர்மா 6. ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.
இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி யில் கேப்டன் விராட்கோலி சதம் விளாசினார்.
விராட்கோலி 110 பந்துகளில் 14 பவுண்டரியுடன் சதம் அடித்து அசத்தினார்.
இந்த தொடரில் அவர் அடிக்கும் 3-வது சதமாகும். சர்வதேச டெஸ்ட் அரங்கில் அவர் அடிக்கும் 20 சதம் இதுவாகும்.
இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் முரளி விஜய் சதம் அடித்து விளாசியுள்ளார்.
முரளி விஜய் 163 பந்துகளில் 9 பவுண்டரியுடன் சதம் அடித்து அசத்தினார். இந்த தொடரில் அவர் அடிக்கும் 2-வது சதமாகும்.



