டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல்..

Published:

1728909 guns - 2026

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தம்பதியர் இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாட்நாமில் இருந்து துப்பாக்கிகளை கடத்தி வந்த இந்திய தம்பதியினர் 2 பேர் சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபட்டனர். கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள் அனைத்தும் பயன்படுத்தும் வகையில் செயல்பாட்டில் இருந்ததாக முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த துப்பாக்கிகளின் மதிப்பு ரூ.22.5 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட தம்பதியர் பெயர் ஜக்ஜித் சிங், ஜஸ்விந்தர் கவுர் என விசாரணையில் தெரியவந்தது.

கடந்த 10ம் தேதி வியட்நாமின் ஹோ சி மின் நகரில் இருந்து இந்தியா திரும்பிய அவர்கள், சுங்கத்துறை கண்காணிப்பில் வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். ஜக்ஜித் சிங் இரண்டு டிராலி பேக்குகளில் கைத்துப்பாக்கிகளை கொண்டு வந்துள்ளார். விசாரணையில், அந்த துப்பாக்கிகளை அவருக்கு அவரது சகோதரர் மஞ்சித் சிங் கொடுத்துவிட்டு, விமான நிலையத்தில் இருந்து சென்றுவிட்டதாக கூறியிருக்கிறார். இதுபற்றி சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img