இலவச பூஸ்டர் தடுப்பூசி முகாம்..

சென்னை எழும்பூரில்18 வயது மேற்பட்டவர்களுக்கு இலவச பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தை மருத்துவத்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

இலவச பூஸ்டர் தடுப்பூசி அடுத்த 75 நாட்களுக்கு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனிடையே திட்டத்தை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,தனியார் மருத்துவமனைகளில் பணம் கொடுத்து பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதால் அதனை இலவசமாக போட மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தடுப்பூசி போடும் பணி இயக்கமாக மாறியது.

வாரந்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் தன வீடுகளை தேடி சென்று தடுப்பூசி போடப்பட்டது. பூஸ்டர் தடுப்பூசிக்கான கால அவகாசம் 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. 31 மெகா தடுப்பூசி முகாம்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி 95% பேரும் 2ம் தவணை தடுப்பூசி 87% பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 11.63 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. 38 மாவட்டங்களில் 2,590 இடங்களில் அரசு கோவிட் தடுப்பு மையங்களில் முதல் தவணை, 2ம் தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.  மெகா தடுப்பூசி முகாம் 15 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் உடல்நிலை நன்றாக உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அல்லது நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்,என்றார்.

1729669 minister - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories