கிருஷ்ணகிரி அருகே தாயும் மகனும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை …

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே  இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாயும் மகனும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளிகளை மோப்ப நாய் பைரவி காட்டிக்கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக போலீசார் நால்வரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

500x300 1730231 dog - 2026

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே, செங்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன் (55).தெருக்கூத்து நாடக கலைஞர். இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி செல்வி, கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து, தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இரண்டாவது மனைவி கமலா (50), அவரது மகன் குரு (17). இருவரும் செங்கல்பட்டியிலுள்ள ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர். 3-வது மனைவி சத்யா. இவர் தற்போது கோவையில் தங்கி கட்டிட வேலை செய்து தந்தை காவேரி, தாய் சாலா ஆகியோருடன் வசித்து வந்தார்.

வியாழக்கிழமை காலை பூட்டிய வீட்டுக்குள் கமலா, குரு ஆகியோர் தீயில் கருகி சடலமாக கிடப்பதாக, கல்லாவி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கிருஷ்ணகிரி கூடுதல் எஸ்.பி. சங்கு, ஊத்தங்கரை டி.எஸ்.பி. அலெக்சாண்டர், கல்லாவி இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது எரிந்த நிலையில் கிடந்த தாய்-மகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில்  சத்யாவுக்கும், திருப்பத்தூர் மாவட்டம், கூறிசலாபட்டு பகுதியை சேர்ந்த ராமதாஸ் (37) இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது தெரியவந்தது. கொலை நடந்த மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அங்கு அந்த மோப்பநாய் செந்தாமரைக்கண்ணன் வீட்டின் ஜன்னல் பகுதிக்கு சென்று மோப்பம் பிடித்தது. பின்னர் அங்கிருந்து சிறிது தூரம் உள்ள சத்யா வீட்டில் இருந்த ராமதாஸ் வேட்டியை கவ்வி பிடித்தது. இதனால் அவர் போலீசில் மாட்டி கொண்டார்.

அப்போது ராமதாஸ் போலீசில் வாக்குமூலம் கொடுத்தார். எனக்கும், சத்யாவுக்கு இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை செந்தாமரைக்கண்ணன், சத்யாவை கண்டித்துள்ளார். இதனால் நானும், சத்யாவும் செங்கப்பட்டிக்கு வந்தோம். அப்போது சொத்தில் பங்கு வேண்டும் என்று சத்யா கணவரிடம் கூறினார். அப்போது என்னையும், சத்யாவையும் செந்தாமரை கண்ணன் கண்டித்தார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தாமரைக்கண்ணன், என்னுடைய இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்து விட்டு சென்றார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அந்த தீயை அணைத்தனர்.

பின்னர் செந்தாமரைக்கண்ணன் வீட்டிற்குள் சென்று விட்டார். அவரை கொலை செய்ய திட்டமிட்டு நான் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் சென்று பெட்ரோல் வாங்கி விட்டு வீட்டிற்கு வந்தேன். பின்னர் செந்தாமரைக்கண்ணன் வீட்டின் கதவை வெளிபக்கமாக பூட்டி ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்தேன். பின்னர் நானும் எதுவும் தெரியாதபடி சத்யாவின் வீட்டில் இருந்தேன். மறுநாள் காலையில் தான் தாய்-மகன் இருவரும் உடல் கருகி உயிரிழந்தது தெரியவந்தது. ஆனால் வீட்டில் செந்தாமரைக்கண்ணன் அங்கு இல்லை என தெரியவந்தது. காலையில் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். நான் எதுவும் தெரியாது என கூறினேன். மோப்பநாய் வந்து என் வேட்டியை கவ்வி பிடித்தது. இதனால் நான் மாட்டி கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார். இது தொடர்பாக கல்லாவி போலீசார் வழக்குபதிவு செய்து ராமதாஸ், சத்யா, காவேரி, சாலா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.இச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள‌ நிலையில் போலீசார் மோப்பநாய் உதவியுடன் உண்மையான குற்றவாளிகளை உடன் கைதுசெய்து விசாரணை நடத்திய சம்பவம் மக்களிடையே திருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories