நூபுர் சர்மாவை கொல்ல வந்த பாகிஸ்தானியர் கைது..

நூபுர் சர்மாவை கொலை செய்ய பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய நபரைக் கைது செய்து புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துகளை பேசிய பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவால், நாடு முழுவதும் பல இடங்களில் கலவரம் வெடித்தது. பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்தில், இந்திய – பாகிஸ்தான் சர்வதேச எல்லை வழியாக நூபுர் சர்மாவை கொலை செய்ய ஊடுருவிய பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.புலனாய்வுத் துறை உள்ளிட்ட முக்கிய அமைப்பின் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,இந்துமல்கோட் எல்லைப் பகுதியில் ஜூலை 16 இரவு 11 மணியளவில் இந்த நபர் கைது செய்யப்பட்டார். ரோந்து குழு, சந்தேகத்தின் அடிப்படையின் இவரை சோதனையிட்டதில், 11 இன்ச் நீள கத்தி, மத புத்தகங்கள், மணல் மூட்டைகள் உள்ளிட்டவை இவரிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

முதற்கட்ட விசாரணையில், இவரின் பெயர் ரிஸ்வான் அஷ்ரப் என்றும், பாகிஸ்தானின் வடக்கு பஞ்சாபில் அமைந்துள்ள மண்டி பஹவுதீன் நகரைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், நபிகள் நாயகத்திற்கு எதிராக கருத்து கூறிய நூபுர் சர்மாவை கொலை செய்ய ஊடுருவியது தெரிய வந்துள்ளது.

images 63 - 2026

நாங்கள் அடுத்தக் கட்ட விசாரணைக்காக உள்ளூர் காவலர்களிடம் இவரை ஒப்படைத்துவிட்டோம். தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 8 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்துள்ளனர். புலானய்வுப் பிரிவினருக்கு இதுகுறித்து தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories