தேர்தலை நடத்துங்கள். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் அரசியலை விட்டே விலகுகிறோம்-செல்லூர் ராஜூ

Published:

தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேலிக் கூத்தாக உள்ளது, மாணவிகளுக்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்கள் மத்தியில் கூறினார்.

மதுரை பழங்காநத்தம் வடக்குத்தெருவில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் கே.ராஜு கூறியதாவது,

மின் கட்டண உயர்வால் தி.மு.க. அரசு தமிழக மக்களை கசக்கி பிழிகிறது என்று தான் சொல்ல வேண்டும். தி.மு.க. அரசு சொன்னதை எதையுமே நிறைவேற்றவில்லை. ஒன்று இரண்டை நிறைவேற்றி விட்டதாக அமைச்சர்கள் சொல்கிறார்கள். முழு பூசணிக்காயை குண்டு சட்டிக்குள் மறைக்க பார்க்கின்றனர். பொய் சொல்லி மக்களை ஏமாற்றி உள்ளனர். நாங்கள் குறை சொன்னால் எதிர்க்கட்சி காழ்ப்புணர்ச்சியால் பேசுகிறார்கள் என கூறுகின்றனர். தி.மு.க. எதுவும் செய்யவில்லை என மக்கள் சொல்கிறார்கள். வீட்டுவரி உயர்வு, மின் கட்டண உயர்வால் மக்கள் கொதித்து போய் உள்ளனர். தி.மு.க. அரசு எதையுமே செய்யாமல் வாக்களித்த மக்களை வாட்டி வதைத்து வருகின்றனர். வாக்களித்த மக்கள் இந்த ஆட்சி பிடிக்கவில்லை வேறு ஆட்சியை மாற்றிக்கொள்ளலாம் என சட்டம் இருந்தால் திமுக அரசு மாற்றப்பட்டு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மக்களால் கொண்டு வரப்படும். அப்படி ஒரு வாய்ப்பு இல்லையே என மக்கள் ஏங்கிக் கொண்டுள்ளனர்.

ALSO READ:  கல்வி அமைச்சரின் ராஜினாமா - மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு துன்பம் துயரம் நிறைந்துள்ளது, தி.மு.க. ஆட்சியில் ஒரு கொடுமை சென்றால் இன்னொரு கொடுமை நடக்கிறது. தி.மு.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மக்கள் பயத்தில் உள்ளனர். பயத்தில் உள்ள மக்களுக்கு பூஸ்ட்டாக ஏதாவது கொடுக்க வேண்டும், ஆனால் துன்பத்தையும், துயரத்தையும் மட்டுமே கொடுக்கும் வகையில் தி.மு.க. தலைமையிலான அரசு செயல்படுகிறது.

தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேலிக் கூத்தாக உள்ளது, மாணவிகளுக்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, தொழிலதிபர்கள் சந்தோஷமாக இல்லை, மின் வெட்டு இருக்கும் போது மின் கட்டண உயர்வு வேறா, ஒன்றிய அரசு ஒன்றிய அரசு என எப்போதும் மத்திய அரசை குறைசொல்லி எங்களை அடிமை அரசு எனக்கூறி தற்போது திமுக அடிமை அரசாக உள்ளனர், கேட்டால் திராவிட மாடல் அரசு எனச் சொல்லுவது கேலிக்கூத்தாக உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் வீட்டு வரி உயர்வுக்கு அட்டையை பிடித்து நின்ற ஸ்டாலினின் தற்போதைய ஆட்சியில் மின்சாரத்தை தொட்டால் ஷாக் அடிக்கும் என்றால் மின்சார கட்டணத்தை பார்த்தாலே ஷாக் அடிக்கிறது, ஒரு சீட் இரண்டு சீட் திமுக தற்போது கூட்டணி பலத்தோடு ஆட்சியில் அமர்ந்துள்ளனர்.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

எங்கள் கட்சியில் உள்ள பிரச்சனையை நாங்கள் பார்த்து கொள்கிறோம். எடப்பாடி பழனிச்சாமியை தொண்டர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு பொதுச் செயலாளர் ஆக்கி உள்ளோம், தற்போதோ அல்லது நாளைக்கோ தேர்தல் வைக்கச்சொல்லுங்கள். அப்போது தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் அரசியலை விட்டே விலகுகிறோம் என கூறினார்.

images 71 1 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img