ஜூலை29 இல் அண்ணா பல்கலை 42-வது பட்டமளிப்பு விழா-பிரதமர் மோடி பங்கேற்பு..

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவை சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழக அரங்கில் வருகிற 29-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 500-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 7 லட்சம் மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். பட்டப்படிப்பு முடித்தவர்கள், மேற்படிப்பு செல்வதற்கும், வேலைவாய்ப்பு பெறவும் சான்றிதழ் அவசியம். ஆனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த கல்வியாண்டு படிப்பு முடித்தவர்களுக்கு இன்னும் பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லை. இதனால் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தவிப்பில் இருந்தனர். இதன் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இப்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவை சென்னை கிண்டியில் உள்ள பல்கலைக்கழக அரங்கில் வருகிற 29-ந்தேதி நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இதில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறுகையில், அண்ணா பல்லைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் முதல் மதிப்பெண்கள் பெற்ற பல்வேறு துறைகளை சார்ந்த 69 மாணவர்களுக்கு 10 கிராம் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. இந்த 69 மாணவ-மாணவிகளுக்கும் பிரதமர் நரேந்திரமோடி பதக்கம் அணிவிக்கிறார்.

தங்கப்பதக்கம் பெறும் 69 பேரில் 31 மாணவ-மாணவிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாகங்களை சேர்ந்தவர்கள். 38 பேர் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த கல்லூரிகளில் படித்தவர்கள். பட்டமளிப்பு விழாவில் நேரில் பங்கேற்க அனைத்து ஆராய்ச்சி மாணவர்களையும் ஜூன் 23-ந்தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டு உள்ளோம் என்றார்.

இதற்கு முன்பு கடந்த 2021 மார்ச் 11-ந்தேதி அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடந்தது. அப்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார். இப்போது 29-ந்தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். இதையொட்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

images 84 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories