December 6, 2025, 7:25 AM
23.8 C
Chennai

தமிழ்நாடு முழுவதும் நடந்த டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு ..

TNPSC Group 4 Exam மைனஸ் மார்க் அபாயம் தேர்வு அறையில் இந்த 3 முக்கிய விஷயங்களை மறக்காதீங்க - 2025

தமிழ்நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வை 22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதியுள்ளனர்.

தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 301 குரூப்-4 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்வதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் (டி.என்.பி.எஸ்.சி) அறிவித்து இருந்தது. அதன்படி தமிழ்நாடு முழுவதும் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வை 22 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் எழுதினார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகளும் தேர்வு எழுதினார்கள். அவர்களில் மொத்தம் 131 பேர் விண்ணப்பித்து இருந்தார்கள். இந்த தேர்வு தமிழகம் முழுவதும் 7 ஆயிரத்து 639 மையங்களில் நடந்தது. சென்னையில் 503 மையங்களில் 1 லட்சத்து 56 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள்.

1734874 tnpsc group4exam - 2025
images 2022 07 24T142322.352 - 2025

லட்சக்கணக்கானவர்கள் ஒரே நேரத்தில் தேர்வு எழுத வந்ததால் அவர்கள் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மாநகரம், நகர்ப்புறங்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டன. சென்னையில் வழக்கமான ஞாயிற்றுக்கிழமைகளில் 2500 பஸ்கள் இயக்கப்படும். இன்று 3 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு மையங்கள் வழியாக சென்ற அனைத்து பஸ்களும் அந்த பகுதியில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தேர்வு எழுத வந்தவர்களுக்கான கட்டுப்பாடுகள், விதிமுறைகள் முன்கூட்டியே தேர்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது. தேர்வு 9 மணிக்கு தொடங்கும். ஆனால் 8.30 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் வந்து விட வேண்டும். 8.59 மணிக்கு பிறகு வருபவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பல இடங்களில் நூற்றுக்கணக்கானவர்கள் 9 மணிக்கு பிறகு தேர்வு எழுத வந்தார்கள் அவர்களை தேர்வு கூடத்துக்குள் அனுமதிக்கவில்லை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் குரூப் 4 தேர்வுக்காக 27 மையங்கள் அமைக்கப்பட்டு, அதில் 5799 பேர் தேர்வு எழுத ஹால் டிக்கெட் பெற்றிருந்தனர். இன்று காலை தேர்வு தொடங்கிய நிலையில் சீர்காழி தென்பாதியில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்திற்கு 40க்கும் மேற்பட்டோர் சில நிமிடங்கள் தாமதமாக வந்தனர். அவர்களை தேர்வு மைய அதிகாரிகள் தேர்வு எழுதுவதற்காக மையத்திற்குள் அனுமதிக்க மறுத்து விட்டார். இதனை அடுத்து அவர்கள் அனைவரும் தங்களை தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கவேண்டும் எனக்கூறி தேர்வு மைய அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமாரையும் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேசிய வட்டாட்சியர், 9 மணிக்குள் வந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என திட்டவட்டமாக தெரிவித்ததால் தாமதமாக வந்த 40க்கும் மேற்பட்ட தேர்வு எழுத வந்தவர்கள்,தேர்வு எழுத முடியாத விரக்தியில் சென்றனர்.

IMG 20220724 WA0064 - 2025

திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மற்றும் பொன்னேரியில் உள்ள உலக நாதன் கல்லூரி, ஆண்கள் பள்ளி, பெண்கள் பள்ளி, பாரத் மெட்ரிக் பள்ளி, வேலம்மாள் பள்ளிஆகிய மையங்களில் தாமதமாக வந்தவர்களை அனுமதிக்காததால் மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் எச்சரித்து விரட்டி விட்டனர். சென்னை புதுக்கல்லூரி, நீலாங்கரையிலும் தாமதமாக வந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் அவர்களை அனுமதிக்கவில்லை. அவர்கள் தேர்வு எழுத முடியவில்லையே என்ற தவிப்புடன் சென்றனர். காலை 9.30 மணி முதல் பகல் 12.30 வரை தேர்வு நடந்தது. முன்கூட்டியே தேர்வை எழுதி முடித்தவர்களும், 12.30 மணிக்கு பிறகே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். தேர்வு எழுதி முடித்த பிறகு ஓ.எம்.ஆர். தாளில் இடது கை பெருவிரல் ரேகையை ஒவ்வொரு வரும் பதிவு செய்தனர். தேர்வில் முறைகேடுகளை தடுக்க 7689 மையங்களிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு இருந்தது. 7689 தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் 1,10,150 கண்காணிப்பாளர்கள் 534 பறக்கும் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories