1735084 thalavadi 01 1 - 2026

கரும்பு லாரிகள் வருகைக்காக காத்திருக்கும் 🐘🐘🐘..

சற்றுமுன்
1735084 thalavadi 01 1 - 2026

தாளவாடி இருந்து சத்தியமங்கலத்துக்கு கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை யானை வழிமறித்தது பசிக்கு கரும்பு சாப்பிடும் சம்பவம் அடிக்கடி நிகழ்வதால் சபோக்குவரத்து பாதிக்கப்படுவது அடிக்கடி நிகழ்கிறது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தின் வழியாக திண்டுக்கல்லில் இருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையை யானைகள் குட்டிகளுடன் அடிக்கடி கடந்து செல்வது வழக்கம். கடந்த சில நாட்களாக கரும்புகளை தின்பதற்காக யானைகள் குட்டியுடன் சாலையில் உலா வருவதும் வாகனங்களை வழிமறைத்து கரும்புகளை தின்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் தமிழக கர்நாடக எல்லை தாளவாடி அருகே காரப்பள்ளத்தில் இருந்து புளிஞ்சூர் செல்லும் சாலையில் குட்டியுன் யானை சாலை உலா வந்தது. அப்போது தாளவாடி இருந்து சத்தியமங்கலத்துக்கு கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை யானை வழிமறைத்தது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் லாரியை நிறுத்தினார். பின்னர் லாரியில் இருந்த கரும்பை யானை துதிக்கையால் எடுத்து தின்றது. பின்னர் டிரைவர் லாரியின் மீது ஏறி கரும்புகளை சாலை ஓரத்தில் தூக்கி எரிந்தார். யானை குட்டியுடன் அந்த கரும்பை தின்றது. பின்னர் லாரி ஓட்டுநர் லாரியை எடுத்து சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.