December 7, 2025, 8:14 PM
26.2 C
Chennai

எனது ஜனாதிபதி பதவி பெண்களின் கனவுகளுக்கான திறவுகோலாக இருக்கும்- திரவுபதி முர்மு..

1735294 president1 - 2025
1735239 droupadi murmu3 1 - 2025

எனது குடியரசுத் தலைவர் பொறுப்பு, ஏழைகள், பெண்களின் கனவுகளுக்கான திறவுகோலாக இருக்கும் என புதியதாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசினார்.

இந்தியாவில் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றுக்கொண்டார். திரவுபதி முர்முவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் திரவுபதி முர்மு ஆற்றிய உரையில் கூறியதாவது,

நாடாளுமன்றத்தில் நிற்பது என்பது அனைத்து இந்தியர்களின் எதிர்பார்ப்பு, லட்சியம், உரிமை. அனைவருக்கும் எனது பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்ள உங்கள் நம்பிக்கையும், ஆதரவும் எனக்கு மிகுந்த வலிமையை அளிக்கிறது. சுதந்திர இந்தியாவுக்கு பின் பிறந்த முதல் ஜனாதிபதி நான் தான். சுதந்திர இந்தியாவின் குடிமக்கள் மீது சுதந்திர போராட்ட வீரர்கள் கொண்ட எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நாம் வேகமாக பாடுபடவேண்டும். ஜனாதிபதி பதவியை அடைவது எனது தனிப்பட்ட சாதனையல்ல. இது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு ஏழைகளின் சாதனை இது. எனது ஜனாதிபதி நியமனம் இந்தியாவில் உள்ள ஏழைகள் கனவுகளை மட்டும் காண்பதுமட்டுமல்லாமல் அந்த கனவுகள் நிறைவேறும் என்பதற்கு ஆதாரம்.

பல ஆண்டுகளாக வளர்ச்சி இல்லாமல் உள்ள ஏழைகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினர் என்னை அவர்களின் பிரதிபலிப்பு பார்ப்பது எனக்கு மனநிறைவை அளிக்கிறது. நான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டது பின்னால் ஏழைகளின் ஆசீர்வாதம் உள்ளது. இது கோடிக்கணக்கான பெண்களின் கனவு மற்றும் திறனின் பிரதபலிப்பு. நம்பிக்கைக்கு அடையாளமாக விளங்கும் புனித நாடாளுமன்றத்தில் இருந்து மக்களை வணங்குகிறேன். எனது குடியரசுத் தலைவர் பொறுப்பு, ஏழைகள், பெண்களின் கனவுகளுக்கான திறவுகோலாக இருக்கும். நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக பணியாற்றுவேன். பழங்குடியினத்தைச் சேர்ந்த நான் குடியரசுத் தலைவரானது ஜனநாயகத்தின் தாயகமான இந்தியாவின் மகத்துவம் .ஆதிவாசிகளின் கனவும் நனவாகும் என்பதற்கு நானே உதாரணம். சிறிய கிராமத்தில் இருந்து பயணத்தை தொடங்கினேன். ஆதிவாசிகளின் கனவும் நினைவாகும் என்பதற்கு நானே உதாரணம் நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக பணியாற்றுவேன். அனைவருக்கமான ஒருங்கிணைந்த பாரதத்தை உருவாக்க முனைப்புடன் செயல்படுவோம். என் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை தான் எனது வலிமை. இந்த பதவியை கவுரவிக்கும் வகையில் செயல்படுவேன். இந்தியாவின் புகழ்பெற்ற வீராங்கனைகள் பட்டியலில் வேலு நாச்சியாரை குறிப்பிட்டு திரவுபதி பதி முர்மு பேசசினார். வேலு நாச்சியார், ராணி லட்சுமி பாய் ஆகியோர் தேச பாதுகாப்பில் புதிய உயரங்களை அளித்துள்ளனர்.

கொரோனாவுக்கு எதிரான போரில் மக்கள் காட்டிய ஒத்துழைப்பு, துணிச்சல் மற்றும் வலிமையின் அடையாளம். ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் இந்தியா 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்தது’ என்றார் புதிய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆவணத்தில் கையெழுத்திட்டு பணியை தொடங்கினார் .ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

pti07 24 2022 000268a114946 - 2025

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories