உ.பி யில் நின்ற சொகுசு பஸ் மீது மற்றொரு பஸ் மோதி 8 பேர் பலி..

789350 bus33 - 2026

உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று நின்று கொண்டிருந்த சொகுசு பஸ் மீது மற்றொரு பஸ் மோதி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டம் அருகே உள்ள பூர்வாஞ்சல் பகுதியில் இருந்து 50 பயணிகளுடன் ஒரு சொகுசு பஸ் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது. நாரயண்பூர் என்ற கிராமத்தில் அதிகாலை பஸ் நரேந்திராபூர் மத்ராஹா கிராமம் அருகே லோனிக்திரா என்ற பகுதியில் வேகமாக வந்தது. அப்போது, பீகாரில் இருந்து டெல்லி நோக்கி சென்ற டபுள் டக்கர் பஸ் என்ஜின் பழுது காரணமாக சாலை ஓரமாக நிறுத்தப்பட்டு இருந்தது.

அந்த நேரத்தில் 50 பயணிகளுடன் சென்ற சொகுசு பஸ், திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் சொகுசு பஸ்சில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அந்தவழியாக சென்ற வாகன ஓட்டிகள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆஸ்பத்தி கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது. மேலும் இறந்தவர்கள் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆஸ்பத்திரியில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்திற்கு மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தன்னுடைய டுவிட்டர் பதிவில், ‘இந்த விபத்து தனக்கு பெரும் அதிர்ச்சி மற்றும் கவலை தருவதாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories