பாம்பு கடித்து இறந்த மாணவி வழக்கில் திருப்பம்- 6பேர் கைது..

திருவள்ளூர் சோழவரம் அருகே பாம்பு கடித்து இறந்த மாணவியை ஏற்கனவே முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோவை அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் பகிர்ந்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி 6பேரை கைதுசெய்தனர்.

திருவள்ளூர் சோழவரம் அருகே உள்ள புதிய எருமை வெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி 4-ம் வகுப்பு படித்து வந்தார். தாய்-தந்தையை இழந்த அவர் செங்கல் சூளையில் வேலைபார்த்து வரும் அத்தையுடன் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.

கடந்த 24-ந் தேதி இயற்கை உபாதை கழிக்க மாணவி சென்ற போது பாம்பு கடித்தது. இதில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்தநிலையில் பாம்பு கடித்து இறந்த மாணவியை ஏற்கனவே முதியவர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோவை அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் பகிர்ந்து வந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளத்திலும் பரவ தொடங்கியது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் உறவினர் ஒருவர் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். வீடியோ காட்சியை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 78 வயது முதியவரான பாலு என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனை அதே பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் மறைந்திருந்து வீடியோ எடுத்து தனது நண்பர்களுக்கு பகிர்ந்து உள்ளார். இந்த பாலியல் கொடுமை சம்பவம் கடந்த 3 மாதத்துக்கு முன்பு நடந்துள்ளது. இதனை வெளியே சொல்லக் கூடாது என்று முதியவர் பாலு மிரட்டியதால் மாணவி வெளியே கூறாமல் இருந்து இருக்கிறார்.

இதற்கிடையே பாம்பு கடித்து மாணவி இறந்த நிலையில் பாலியல் வன்கொடுமை வீடியோ பரவியதால் முதியவர் பாலு போலீசில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் பாலு, சிறுமியின் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த சதீஷ், விஜயகுமார், ரமேஷ், பாஸ்கர், கண்ணன் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. கைதான 6 பேரையும் போலீசார் திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வீடியோவில் முதியவரை தள்ளிவிட முயன்றாலும் கூட அவர் மிரட்டி தனது ஆசைக்கு இணங்க வைக்கிறார். சிறுமியின் மரணத்திற்கு பாம்பு கடித்ததே காரணம். இந்த வீடியோவை பல வாட்ஸ்அப் குழுக்களில் பகிர்ந்த 5 பேரையும் கைதுசெய்து உள்ளோம். இந்த வீடியோ காட்சியை வைத்து முதியவரை அவர்கள் மிரட்டி பணம் பறித்தனரா? என்றும் விசாரணை நடந்து வருகிறது என்றார்.

images 2022 07 27T114715.684 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories