
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கி வைக்க பிரதமா் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார் வேஷ்டி சட்டையில் சதுரங்க விழா எம்பளத்துடன் .வானிலை மாற்றத்தால் பிரதமர் மோடி வருகை சற்று காலதாமதம் ஆனது.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் தொடக்க விழாவில் இசை நிகழ்ச்சிகள் ஒரு புறம் நடக்க, பல்வேறு மணற்ஓவியங்களை வரைந்து பார்வையாளர்களைக் கவர்ந்தார் ஓவியர் சர்வம் படேல். மாமல்லபுரத்தில் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் தொடக்க விழா நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலா் கலந்து கொள்கின்றனா். வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் தொடக்க விழாவில் பங்கேற்கும் வீரர் வீராங்கனைகளின் அணிவகுப்பு நடந்து வருகிறது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கி ஆக. 10-ஆம் தேதி வரை 14 நாள்கள் நடைபெறுகின்றன. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் பிரதமா் நரேந்திர மோடி இன்று மாலை வண்ணமயமாக நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் போட்டியைத் தொடக்கிவைக்கிறாா்.
இதற்காக பிற்பகல் 2.20 மணிக்கு குஜராத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்கு மாலை 4.45 மணிக்கு வருகை தர திட்டமிடப்பட்டது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியின் வருகை சற்று தாமதமானது.
தற்போது பிரதமர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் 5.45 மணிக்கு ஐஎன்எஸ் அடையாறு வந்து அங்கிருந்து காா் மூலம் 6 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கம் செல்லும் பிரதமா், செஸ் ஒலிம்பியாட்டை தொடக்கி வைக்கவிருக்கிறார்.
தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுடன் பங்கேற்றுள்ளார். இந்தியாவின் புகழ்பெற்ற 8 வகை நடனங்களும் இடம்பெற்றுள்ளன.