வழியனுப்பு நிகழ்வில் பிரதமர் மோடிக்கு செஸ் போர்டை நினைவுப் பரிசாக வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

பிரதமர் மோடிக்கு செஸ் போர்டை நினைவுப் பரிசாக வழங்கி முதல்வர் ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார். 

பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக நேற்று தமிழகம் வருகை தந்திருந்தார். தொடர்ந்து சென்னை நேரு உள்விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி முறைப்படி தொடங்கி வைத்தார். இதன்பின்னர் கார் மூலம் ஆளுநர் மாளிகைக்கு சென்ற அவர் இரவு அங்கு தங்கினார். இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். 

ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் இதில் கலந்துகொண்டனர். பட்டமளிப்பு நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு, சென்னை விமான நிலையம் சென்ற பிரதமர், அங்கிருந்து அகமதாபாத் புறபட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர். அப்போது பிரதமர் மோடிக்கு செஸ் போர்டை நினைவுப் பரிசாக வழங்கி முதல்வர் ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார். 

இதுகுறித்து முதல்வரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பதிவில், சென்னையில் நடைபெற்ற 44ஆவது சர்வதேச சதுரங்கப் போட்டி தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் 42ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின்னர் அகமதாபாத் செல்லும் பிரதமர் மோடியை சென்னை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின் நினைவுப் பரிசாக சதுரங்கப் பலகையை வழங்கி வழியனுப்பி வைத்தார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

stalin1 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories