மே.வங்காளத்தில் காரில் ரூ50 லட்சத்துடன் பிடிபட்ட ஜார்க்கண்ட் காங் எம்.எல்.ஏ.க்கள் ..

images 2022 07 31T150240.361 - 2026
Tamil News large 3089344 - 2026

மேற்குவங்காளத்தில் காரில் 50 லட்ச ரூபாய் பணத்துடன் பிடிபட்ட ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும் கட்சியில் இருந்து இன்று காங்கிரஸ் கட்சி அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியில் ஜார்கண்ட் முக்தி மோச்சா கட்சியின் ஹிமந்த் சோரன் முதல்-மந்திரியாக செயல்பட்டு வருகிறார். இதனிடையே, மேற்குவங்காள மாநிலத்தின் ஹவுரா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு காரில் மிகப்பெரிய அளவில் பணம் கொண்டு செல்லப்படுவதாக அம்மாநில போலீசாருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த தகவலையடுத்து இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்திய போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் ராணிஹடி என்ற பகுதியில் வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தினர். அந்த காரில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சஷப், நமன் பிக்சல் கொங்கரி ஆகிய 3 பேர் பயணித்தது தெரியவந்தது.

இதையடுத்து, காரின் பின் பகுதியில் போலீசார் சோதனை நடத்தியபோது இருக்கைக்கு பின்னே கட்டுகட்டாக பணம் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அந்த பணத்தை கைப்பற்றிய போலீசார் ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் உள்பட காரில் பயணித்த 5 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களிடம் இந்த பணம் யாரிடம் பெறப்பட்டது. எங்கு கொண்டு செல்லப்படுகிறது உள்பட பல்வேறு கேள்விகளை போலீசார் எழுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரில் இருந்து மொத்தம் 50 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஜார்க்கண்டில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக முயற்சித்து வருவதாகவும், இதற்காக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் பாஜக மீது காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்து வருகிறது.

இந்நிலையில், மேற்குவங்காளத்தில் காரில் ரூ. 50 லட்சம் பணத்துடன் பிடிபட்ட இர்பான் அன்சாரி, ராஜேஷ் கச்சஷப், நமன் பிக்சல் ஆகிய 3 எம்.எல்.ஏ.க்களையும் கட்சியில் இருந்து இன்று சஸ்பெண்ட் செய்து காங்கிரஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories