நில மோசடி வழக்கில் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கைது..?

500x300 799394 sanay - 2026

நில மோசடி வழக்கில் சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் மீது 1,034 கோடி நில மோசடி வழக்கு உள்ளது. இதில் சட்டவிரோதமாக நடந்த பணபரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கதுறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கடந்த 1-ந்தேதி சஞ்சய் ராவத் மும்பை அமலாக்கதுறை அலுவலகத்தில் ஆஜரானார்.

அவரிடம் மோசடி குறித்து 10 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். இதன் தொடர்ச்சியாக 20-ந் தேதி மற்றும் 27-ந்தேதி ஆஜராகும்படி சஞ்சய் ராவத்துக்கு 2 முறை சம்மன் அனுப்பட்டது. ஆனால் தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வருவதால் ஆகஸ்டு மாதம் 7-ந் தேதிக்கு பிறகு ஆஜராக விலக்கு அளிக்கும்படி சஞ்சய் ராவத் தரப்பில் அமலாக்கதுறைக்கு தெரிவிக்கப்பட்டது.

மும்பை புறநகர் பகுதியான பாண்டூப்பில் உள்ள சஞ்சய் ராவத் வீட்டுக்கு இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கதுறை அதிகாரிகள் அதிரடியாக சென்றனர். பின்னர் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்த சஞ்சய் ராவத்திடமும் விசாரணை நடத்தப்பட்டது. பணபரிவர்த்தனை மற்றும் மனைவி உள்ளிட்டவர்கள் பெயரில் உள்ள சொத்துக்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சஞ்சய்ராவத் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் என் மீது தவறான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நான் இறக்கும் வரை சிவசேனாவில் இருந்து விலக மாட்டேன். நான் எந்த மோசடியிலும் ஈடுபடவில்லை என கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories